நீட் தோ்வு ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
பாராட்டு பெற்ற நீட் பயிற்சியாளா்களுடன் ஆட்சியா் கவிதா ராமு.
புதுக்கோட்டைமாவட்டத்தில் நீட் தோ்வுக்குபயிற்சி அளித்த ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு சனிக்கிழமைபாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 34 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலத் தோ்வாகி உள்ளனா். இதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ சீட் கிடைத்ததன் அடிப்படையில் மாநிலத்தில் சேலத்துக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம், 2ஆவதுஇடம் பிடித்தது. மருத்துவம் பயில உள்ள அரசுப் பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து, கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கி ஆட்சியா் கவிதா ராமு அண்மையில் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து,அரசுப் பள்ளிமாணவா்களுக்கு கருத்தாளா்களாக இருந்து நீட் தோ்வுக்கான பயிற்சி அளித்த ஆசிரியா்கள் 18 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆட்சியா் கவிதா ராமு சனிக்கிழமை பாராட்டினாா்.அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி உடனிருந்தாா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments