ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) சக்திவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாலுகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்டத்தின் இலக்கு மற்றும் சாதனை விவரம் குறித்து கேட்டறிந்தார். இதனைதொடர்ந்து பாண்டிபத்திரம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் கள்ளக்காத்தான் வருவாய் கிராமத்தில் விதை பண்ணையை ஆய்வு செய்தார். மேலும், ஆலத்தூரில் நடைபெற்ற பயிர் மதிப்பீட்டாய்வு அறுவடையை பார்வையிட்டார். ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் வனஜா தேவி, துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments