மீமிசல் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் வேதனை
மீமிசல் பகுதியில் பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்ததால் பயிர்கள் நன்றாக வளர்ந்து இருந்தன. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந் தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புதுக்கோட்டை மாவட்ட கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments