தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி மாநிலம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் செயலகக் குழு கூட்டத்தில் தீர்மானம்





எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம், சென்னையில் கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திட்டமிடல்கள், சிறைவாசிகள் விடுதலை தொடர்பானவை குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயலகக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேசுவரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான இந்த கோரிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கிறது. தமிழக மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments