கத்தாரில் சிக்கி தவித்த தமிழரை மீட்டெடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


கத்தாரில் சிக்கி தவித்த தமிழரை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த சகோ.காதர் மொய்தீன் கத்தார் நாட்டிற்க்கு வேலைக்கு சென்ற இடத்தில் அவரின் முதலாளி அவரை மிகவும் சிரமப்படுத்துவதோடு  அடிமையை போல நடத்துக்கிறார் என்றும் நான் உயிர் வாழ்வதே சிரமமாக இருக்கிறது என்றும் தன்னை தவ்ஹீத் ஜமாத் அரபியிடம் பேசி மீட்டு தாயகம் அனுப்ப வேண்டும் என்று மிகுந்த கவலையுடனும் கண்ணீருடனும் வீடியோ பேசி கோரிக்கையாக  வெளியிட்டுயிருந்தார்

அவருக்கு உதவும் நோக்கத்தோடு தவஹீத் ஜமாத் கத்தார் மண்டலம் களம் இறங்கி தூதரகம்  மூலம் காதர் மொய்தீனை மீட்டு தாயகம் அனுப்பினர்...
கத்தார் நாட்டில் சிக்கி இருந்த காதர் மொய்தீன் TNTJ மூலம் மீட்கப்பட்டு 14.02.2022 காலை 4:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து சேர்ந்தார்.

தாயக‌ம் திரும்பியவரை விமான நிலையத்தில் மாநில நிர்வாகிகள் காஞ்சி இபுராஹிம் மாநில பொருளாளர்,ஐ.அன்சாரி மாநில செயலாளர் மற்றும் ராம்நாடு தெற்கு மாவட்ட  நிர்வாகிகள் அவரின் குடும்பத்தார்கள் வரவேற்று நம்மிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்...

என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments