கர்நாடக பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்






கர்நாடக பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகா கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்யும் பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்ட தலைவர் ரியாஸ் முகமது தலைமையில் மாநில செயலாளர் சேக் முன்னிலையில் 
இந்திய மாணவர் வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் கர்ணா கண்டன கோஷாத்தை முன்மொழிந்தார். 500 நூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கர்நாடக பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில துணை பொது செயலாளர் பக்கீர் முகமது அல்தாஃபி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அவர் தன் கண்டன உரையின்போது ஹிஜாப் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பும் தருகிறது. ஹிஜாப் அணிவது இந்திய அரசியல் சாசனம் தரும் அடிப்படை உரிமை எனவே கர்நாடக அரசு ஹிஜாப் அணிவதை தடை செய்யும் நோக்கத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் சிஏஏ பிரச்சினையை போன்று நாடு முழுவதும்  போராட்டங்கள் வெடிக்கும் என பேசினார். இறுதியில் மாவட்ட செயலாளர் முகமது ஃபஹத் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments