ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுத்த பாசிச பாஜக ஆளும் கர்நாடக அரசை கண்டித்தும், நீதிமன்றத்தின் அநீதியை கண்டித்து
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் தமுமுக  மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) சார்பில் பிப்ரவரி 14 அன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இதில் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் , ரியாத் மண்டல தலைவர் நூர் முகம்மது உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்

தமுமுக ஊடக பிரிவு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments