புதுக்கோட்டை வழியாக செல்லும் சென்னை எழும்பூர் 🔁 காரைக்குடி பல்லவன் ரயில் சேவைகளில் மாற்றம்!
சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் ரயில் சேவைகளில் மாற்றம்!
காரைக்குடி - செங்கல்பட்டு

(16/02/22) புதன் அன்று
12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் ‘பல்லவன்’ ரயில், செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.புதுக்கோட்டையிலிருந்து காலை 05:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்

செங்கல்பட்டு - காரைக்குடி

(16/02/22) புதன் அன்று 12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி ‘பல்லவன்’ ரயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. 
மேலும் இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மாலை 04:45 மணிக்கு புறப்படும். 

ரயில் அட்டவணையின் படி புதுக்கோட்டைக்கு பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில் இரவு 09: 48 மணிக்கு வந்து சேரும்  

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments