புதுக்கோட்டை வழியாக செல்லும் ராமேஸ்வரம்-கோவை வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர் .

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம்- கோவைக்கு ஒவ்வொரு புதன் கிழமையும், ராமேஸ்வரம்- ஓகாவிற்கு ஒவ்வொரு வெள்ளிகிழமையும், ராமேஸ்வரம்-புவனேஸ்வருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாராந்திர  ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை வாராந்திர ரயில் மீட்டர் கேஜ் பாதையில் தினசரி ரயிலாக மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது.. தற்போது இந்த ரயில் கரூர், ஈரோடு வழியாக கோவை செல்கிறது. இந்த ரயில் வியாபாரிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ராமேஸ்வ ரம்-கோவை  வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கொரோனா பேரிடர் பரவல் தடுப்பு நடவடிக்கையால் நிறுத்திய ராமேஸ்வரம்-மதுரை  இடையே பகல், மாலை நேர ரயில்கள். மதுரை - ராமேஸ்வரம் இடையே காலை, பகல் நேர சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்

சென்னை -ராமேஸ்வ ரம் (சேது எக்ஸ்பிரஸ்)  விரைவு ரயிலுக்கு மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் நீக்கப்பட்டுள்ளதால். இந்த ரயிலில் மண்டபம் வரும் பயணிகள் ராம நாதபுரம் வரை டிக்கெட் எடுத்து நள்ளிரவு 2 மணி யளவில் ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்குவதால் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். கடந்த காலங்களை போல் இந்த ரயிலை மண்டபம் ஸ்டேஷனில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

கோயம்புத்தூர் - இராமேஸ்வரம் அட்டவனை

இராமேஸ்வரம் - கோயம்புத்தூர் அட்டவனைஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments