மீமிசல் அருகே R.புதுப்பட்டிணத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் பலி




R.புதுப்பட்டிணம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் மான் உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள R. புதுப்பட்டிணம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் சேர்ந்து மானைத் துரத்திக் கடித்துள்ளன.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் இருந்த மானை கண்ட பொதுமக்கள் நாய்கள் கடித்த புள்ளிமானை மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே மான் இறந்து விட்டது.

பின்னர் வந்த வனச்சரக அலுவலர் மானை மீட்டு உடற்கூராய்வு செய்வதற்கு எடுத்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments