கோபாலப்பட்டிணத்தில் GPM சீரமைப்பு குழு சார்பில் கருவேல மரங்கள் அகற்றம்.!




கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் காட்டுகுளம் நான்கு ரோட்டில் இருந்து ரைஸ்மில்லுக்கு செல்லும் சாலையில் சீமை கருவேல மரங்கள் சாலையின் இருபுறமும் காடுபோல் வளர்ந்து இருந்த நிலையில் அந்த வழியாக பள்ளிக்கூடத்திற்கு சென்று வரக்கூடிய சிறுவர்கள் மற்றும் வங்கிகளுக்கு சென்று வரக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.









எனவே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் நேற்று 17.02.2022 வியாழக்கிழமை அன்று சாலையின் இருபுறமும் காடு போல் வளர்ந்திருந்த கருவேல மரங்களை JCB இயந்திரம் மூலம் GPM சீரமைப்பு குழு சார்பில் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலை பொலிவு பெற்றது.

கோரிக்கையை ஏற்று சீமை கருவேல மரங்களை அகற்றிய GPM சீரமைப்பு குழுவிற்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் GPM சீரமைப்பு குழு சார்பில் புதிதாக இந்த சாலை போடப்பட்டது. மேலும் காட்டுகுளத்தை சுற்றி மரங்களை நட்டு இன்றளவும் அதை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  
இது போன்று கோபாலப்பட்டிணம் மக்களுக்காக சேவைகளை செய்து வரும் GPM சீரமைப்பு குழுவி சிறப்பாக செயல்பட GPM மீடியா குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: GPM சீரமைப்பு குழு கவனத்திற்கு.. இனி வரும் காலங்களில் இது போன்ற வேலைகளை நமது ஊராட்சி மன்ற தலைவரிடம் மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

தகவல்: GPM சீரமைப்பு குழு


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments