ஊராட்சி முதல் மாநகராட்சி வரை; உள்ளாட்சி அமைப்புகளின் இந்த வித்தியாசங்கள் அறிவீர்களா?

நடப்பது என்னவோ, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தான். ஆனால், தமிழகமே ரகளைபுரமாக மாறிக்கிடக்கிறது. கிட்டத்தட்ட ஊரக உள்ளாட்சிகளிலும்கூட இதைப் பற்றிய பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சரி, அதென்ன ஊரக உள்ளாட்சி... நகர்ப்புற உள்ளாட்சி?

இந்தக் கேள்வி பலருக்குள்ளும் அலையடித்துக் கொண்டேதானிருக்கிறது. ஆம், இந்த உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய தெளிவு, எத்தனை முயன்றாலும் பலருக்குள்ளும் வருவதே இல்லை. அதற்குக் காரணம்... உள்ளாட்சி அமைப்புகளுக்கான படிநிலையே! `எனக்கு அதெல்லாம் அத்துப்படி' என்று தெளிவாகப் பேசுவோரிடம்கூட, தெளிவு இல்லை என்பதே உண்மை. அவர்களில், `கவுன்சிலர்னா... கவுன்சிலர்', `மெம்பர்னா... மெம்பர்', `வார்டுனா... வார்டு' என்று `ரொம்பத் தெளிவாக'க் கடப்பவர்களே அநேகம்.

ஊரக உள்ளாட்சி என்பது கிராமப்புற உள்ளாட்சிகளைக் குறிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி என்பது நகர்ப்புற உள்ளாட்சிகளைக் குறிக்கும். ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இரண்டுமே மூன்றடுக்கு முறையில் அமைக்கப் பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சியானது... கிராமப்புறங்கள் அடங்கிய ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்று மூன்று அடுக்குகளாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சியானது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று மூன்று அடுக்குகளாக அமையும்.

முதலில் ஊரக உள்ளாட்சி அமைப்பு குறித்துப் பார்ப்போம்!
 
ஊராட்சி (VILLAGE PANCHAYAT)
ஒவ்வோர் ஊராட்சியும் தனியான ஒரு கிராமமாகவோ (ஊர்) அல்லது குறைந்தபட்சம் ஒரு குக்கிராமத்தையும் உள்ளடக்கியதாகவோ இருக்கும். ஒரு பெரிய கிராமத்துடன் மூன்று, நான்கு குக்கிராமங்கள் சேர்ந்திருக்கும் ஊராட்சிகளும் உண்டு. இதிலிருக்கும் பெரிய கிராமம்தான் அந்த ஊராட்சிக்குத் தலைநகரம். குறைந்தபட்சம் 1,200 முதல் அதிகபட்சம் 15,000, 20,000 வாக்காளர்கள் கொண்ட ஊராட்சிகளும்கூட இருக்கின்றன.

ஊராட்சிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 6 வார்டுகள் இருக்கும். அதிகபட்சமாக 17, 18, 20 வார்டுகள் கொண்ட ஊராட்சிகளும் உண்டு. அதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இந்த வார்டுகள் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்படும் வார்டுகளுக்குக் கவுன்சிலர்கள் (பிரதிநிதிகள்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களை வார்டு மெம்பர்கள் என்றும் அழைப்பார்கள். இவர்களிலிருந்து ஒருவர் ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கு வருவார். ஊராட்சித் தலைவர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது, வார்டு கவுன்சிலருக்கு ஒரு வாக்கு, ஊராட்சித் தலைவருக்கு ஒரு வாக்கு என ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு ஓட்டு போடுவார்கள். ஊராட்சித் தேர்தலுக்கு கட்சிச் சின்னங்கள் கிடையாது. முழுக்க சுயேச்சை சின்னங்களில்தான் போட்டியிட முடியும்.

ஊராட்சி ஒன்றியம் (PANCHAYAT UNION)
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊராட்சிகள் அடங்கிய பகுதிகள் சேர்ந்தது ஊராட்சி ஒன்றியம் என்று அழைக்கப்படும். இதைப் பஞ்சாயத்து யூனியன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பி.டி.ஓ என்றொரு அதிகாரியின் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிளாக் டெவலப்மென்ட் ஆபீஸர் (BDO) எனப்படும் அவர்தான் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் அரசாங்க நிர்வாகி.

இதிலிருக்கும் ஊராட்சிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிக்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 5,000 வாக்காளர்கள் இருக்க வேண்டும். பல ஊராட்சிகள், சுமார் 1200, 1500 என்கிற எண்ணிக்கையில் வாக்காளர்களைக் கொண்டிருக்கும். இவற்றில் இரண்டு, மூன்று, நான்கு ஊராட்சிகளைக்கூட இணைத்து ஓர் ஊராட்சி ஒன்றிய வார்டு உருவாக்கப்படும். அதாவது, ஓர் ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு குறைந்தபட்சம் 5,000 வாக்குகள் வர வேண்டும். ஒரே ஊராட்சியில் 10,000 வாக்காளர்கள் என்றால், அந்தக் கிராமம் இரண்டு ஊராட்சி ஒன்றிய வார்டு கொண்டதாக வரையறுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஒரேமாதிரியான எண்ணிக்கையில் வார்டுகள் இருக்காது. வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25, 30 என வார்டுகளின் எண்ணிக்கை மாறுபடும்.

ஓர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 வார்டுகள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வார்டுகளில் தேர்தல் மூலம் 20 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது கட்சிச் சின்னங்களுடன்கூடிய தேர்தல். சுயேச்சையாகவும் போட்டியிடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் 20 கவுன்சிலர்களும் சேர்ந்து அவர்களில் ஒருவரை, ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வார்டு கவுன்சிலருக்காகவும் ஒரு வாக்கைக் கிராமப்புற மக்கள் அளிப்பார்கள். ஆக, இது கிராமப்புற மக்கள் போடும் மூன்றாவது வாக்கு.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊராட்சிகள் அடங்கிய பகுதிகள் ஊராட்சி ஒன்றியம் என்று பார்த்தோம். அதேபோல குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்தது மாவட்ட ஊராட்சி. சுமார் 50,000 வாக்குகள் கொண்டது, மாவட்ட ஊராட்சி வார்டாகப் பிரிக்கப்படும். அனைத்து மாவட்ட ஊராட்சிகளுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் வார்டுகள் இருக்காது. வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 20, 25 வார்டுகள் என மாறுபடும்.

ஒரு மாவட்டத்தில் 30 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். இந்த 30 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது கட்சிச் சின்னங்களுடன்கூடிய தேர்தல். சுயேச்சையாகவும் போட்டியிடலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் 30 கவுன்சிலர்களும் சேர்ந்து தங்களில் ஒருவரை, மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த மாவட்ட வார்டு கவுன்சிலருக்காகவும் ஒரு வாக்கைக் கிராமப்புற மக்கள் அளிப்பார்கள். ஆகமொத்தம், ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் என மொத்தம் நான்கு வாக்குகளை, கிராமப்புற வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அளிப்பார்கள்.

பேரூராட்சி (Town Panchayat)

ஊராட்சிகளாக இருக்கும் கிராமங்கள், வருவாய் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் வளர்ச்சி காணும்போது அவை சிறுநகரங்களாக அறியப்படும். அருகிலுள்ள ஊராட்சிகளையும் இணைத்து, பேரூராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும். இந்தப் பேரூராட்சியானது மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளாகப் பிரிக்கப்படும்.

ஒரு பேரூராட்சியில் சுமார் 35 வார்டுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இந்த வார்டுகளுக்குக் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களிலிருந்து ஒருவர் பேரூராட்சித் தலைவராகவும் பேரூராட்சித் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இங்கே கட்சி சார்பான சின்னங்களுக்கு அனுமதி உண்டு. சுயேச்சையாகவும் போட்டியிடலாம்.

நகராட்சி (MUNICIPALITY)

பேரூராட்சி அந்தஸ்தில் இருக்கும் சிறுநகரங்கள், மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் வளர்ச்சி அடையும்போது நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்படும். அருகிலுள்ள பிற பேரூராட்சிகள், ஊராட்சிகளையும் இணைத்தே இந்த நகராட்சி உருவாகும். ஒரு நகராட்சியில் சுமார் 50 வார்டுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வார்டுக்கும் நகராட்சி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களிலிருந்து ஒருவர் நகராட்சித் தலைவராகவும் நகராட்சித் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இங்கே கட்சி சார்பான சின்னங்களுக்கு அனுமதி உண்டு. சுயேச்சையாகவும் போட்டியிடலாம்.

மாநகராட்சி (CORPORATION)

நகராட்சிகள், மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் வளர்ச்சி அடையும்போது, மாநகராட்சிகளாக அந்தஸ்து உயர்த்தப்படும். அருகிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்துதான் இந்த மாநகராட்சி உருவாக்கப்படும். ஒரு மாநகரத்தில் சுமார் 100 வார்டுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வார்டுக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்களிலிருந்து ஒருவர் மாநகராட்சி மேயராகவும், துணைமேயராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இங்கே கட்சி சார்பான சின்னங்களுக்கு அனுமதி உண்டு. சுயேச்சையாகவும் போட்டியிடலாம்.

மறைமுகத் தேர்தல்?

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய ஆறு அமைப்புகளுக்கும் நேரடியாகத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நேரடி தேர்தல். அதாவது, வார்டு கவுன்சிலருக்கும் தலைவர்களுக்கும் மக்களே நேரடியாக ஓட்டு போடுவார்கள்.

இதே ஆறு அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலமாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது மறைமுகத் தேர்தல். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது, ஊரக உள்ளாட்சி அமைப்பில் வரும் கிராமப்புற ஊராட்சி என்கிற அமைப்புக்கு மட்டும்தான், மக்களே வாக்களித்து தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பது நடைமுறையில் இருக்கிறது. மற்ற அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல்தான்.

ஒரு காலத்தில் இந்த ஆறு அமைப்புகளுக்கும் நேரடியாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க என ஆட்சிகள் மாறும்போது, அவர்களுடைய வசதிக்கு ஏற்ப கவுன்சிலர்கள் மூலமே தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்தி, தற்போது அதையே தொடர ஆரம்பித்துவிட்டனர். இப்படி மாநில அரசின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையை மாற்றிக்கொள்வதற்கு பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வுநிலை ஊராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, தேர்வுநிலை நகராட்சி என்றெல்லாம் சிலவற்றுக்கு அந்தஸ்து கொடுத்திருப்பார்கள். அவையெல்லாம், வழக்கமான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள்தான். ஆனால், கூடுதல் வருமானம் வரக்கூடிய பகுதிகளாக இருக்கும்பட்சத்தில் தேர்வுநிலை என்கிற அந்தஸ்தைப் பெறும். மற்றபடித் தேர்தல் முறையில் அந்தத் தேர்வுநிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த மாற்றமும் இருக்காது.

நகரியம் (Township)

நகரியம் என்றோர் அமைப்பும் இருக்கிறது. பெரும்பாலும் மத்திய அரசின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள் இப்படி நகரியம் (டவுன்ஷிப்) என்று அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் போன்றவை அமைந்துள்ள ஊர்கள், நகரியம் என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை புத்தம் புதிதாக உருவாக்கப்பட்ட நகரங்களாகவே இருக்கும். இந்த நகரியமானது, நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் வரும். அவர்தான் இதற்குத் தலைவர். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நியமிப்பார். இங்கே உள்ளாட்சித் தேர்தல் நடக்காது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களும் இப்படி நகரியம் என்கிற வரையறைக்குள் கொண்டு வரப்படுவது உண்டு. உதாரணத்துக்கு, பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்த உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம், நகரியம் என்கிற அமைப்புக்குள்தான் பல ஆண்டுகளாக இருந்தது. தொல்பொருள் சின்னங்கள் நிறைந்த, உலகப் பண்பாட்டு அமைப்பின் பட்டியலில் இணைந்த நகரம் என்பதால், இதற்கு இத்தகைய அந்தஸ்து. ஒருகட்டத்தில், பேரூராட்சி என்கிற அந்தஸ்துக்கு மாமல்லபுரம் உயர்த்தப்பட்டுவிட்டது. வழக்கமான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அங்கே நடக்கிறது.

நகரங்கள், மாவட்ட ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வருமா?

காஞ்சிபுரம் மாநகராட்சி என்று இருக்கிறது. அதேசமயம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் காஞ்சிபும் மாவட்ட ஊராட்சி ஆகிய அமைப்புகளும் இருக்கின்றன. அப்படி யென்றால், காஞ்சிபுரம் மாநகராட்சியானது, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றின் அதிகார வரம்புக்குள் வருமா? இதேபோல பேரூராட்சி, நகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இவையெல்லாம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சியின் அதிகார வரம்புக்குள் வருமா என்கிற கேள்வி இயல்பாகவே எழும். இல்லை என்பதுதான் இதற்கான பதில். அதாவது, ஓர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராகவும், மாவட்ட ஊராட்சியின் தலைநகராகவும் காஞ்சிபுரம் இருக்கலாம். அதற்காக, அந்த மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகார வரம்புக்குள் காஞ்சிபுரம் மாநகராட்சியானது வராது. தனித்த நகர்ப்புற உள்ளாட்சியாகத் தனிப்பட்ட அதிகாரத்தோடுதான் காஞ்சிபுரம் மாநகராட்சியானது இயங்கும். இதேபோலத்தான் பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகியவையும் தனிப்பட்ட அதிகாரத்தோடுதான் இயங்கும்.

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா, முடிந்த அளவுக்கு, தெரிந்த அளவுக்குத் தெளிவுபடுத்த முயற்சி செய்துள்ளோம். இதற்குப் பிறகும் தெளிவுபிறக்கவில்லை என்றால், பஞ்சாயத் ராஜ் சட்டப் புத்தகத்தைத் தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள்ஊராட்சி முதல் மாநகராட்சி வரை; உள்ளாட்சி அமைப்புகளின் இந்த வித்தியாசங்கள் அறிவீர்களா?

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா, முடிந்த அளவுக்கு, தெரிந்த அளவுக்குத் தெளிவுபடுத்த முயற்சி செய்துள்ளோம். இதற்குப் பிறகும் தெளிவுபிறக்கவில்லை என்றால், பஞ்சாயத் ராஜ் சட்டப் புத்தகத்தைத் தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments