புதுக்கோட்டை மாவட்டத்தில் 69.61 சதவீதம் வாக்குப்பதிவு




ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட போது எடுத்த படம். (இடம்:- புதுக்கோட்டை சாந்தநாதபுரம்.)

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல 8 பேரூராட்சிகளிலும் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன.

பேரூராட்சிகளில் அதிகம்

அறந்தாங்கி நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற போது ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டன. இதில் நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் அதிகம் வாக்குப்பதிவு சதவீதம் காணப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சியில் நேற்று மாலை 5 மணி நேர நிலவரப்படி 63.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அறந்தாங்கி நகராட்சியில் 69.47 சதவீதம் வாக்குகள் பதிவானது. 8 பேரூராட்சிகளில் 76.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

69.61 சதவீதம் வாக்குப்பதிவு

இந்தநிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பின் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 533 வாக்காளர்களில் 82 ஆயிரத்து 976 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு 65.06 சதவீதமாகும். மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 407 வாக்காளர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 358 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த வாக்குப்பதிவு 69.61 சதவீதமாகும். மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments