கோபாலப்பட்டிணம்‌ மைந்தாங்கரையில் புதர் போல் மண்டி கிடக்கும் முள் செடி, கொடிகளை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்!!




கோபாலப்பட்டிணம்‌ மைந்தாங்கரையில்  புதர் போல் மண்டி கிடக்கும் முள் செடி, கொடிகளை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகர் செல்லும் சாலையில்  நெடுங்குளம் எதிர்புறமாக மைந்தாங்கரை உள்ளது.
இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.









இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மைந்தாங்கரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால்  ஏராளமான முள் செடி, கொடிகள் புதர் போல் மண்டி உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்ய வரும் ஏராளமான நபர்களுக்கும், வயதானவர்களுக்கும் புதருக்குள் மண்டி கிடக்கும் நெருஞ்சி முள் காலில் குத்தி பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பூச்சிகள் மற்றும் விஷசந்துக்கள் நடமாட்டமும் காணப்படுகிறது.

எனவே ஊராட்சி நிர்வாகம், ஜமாத் நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மைந்தாங்கரையில் புதர் போல் மண்டி கிடக்கும் முள் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments