பெருங்களூர் ஊராட்சியில் தரமற்றதாக அமைக்கப்படுவதாக கூறி சாலைப்பணியை தடுத்து நிறுத்திய கிராமமக்கள்புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் முல்லை நகரிலிருந்து காட்டுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் 1,200 மீட்டர் தூரச்சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தார்சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளவர் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதோடு அந்த பணியை நேற்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், இந்த சாலை தரமற்ற முறையில் மீண்டும் அமைக்கப்படுமேயானால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments