கோபாலப்பட்டிணத்தில் நாளை பிப்ரவரி 27 இரண்டு இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்...


கோபாலப்பட்டிணத்தில் நாளை பிப்ரவரி 27 இரண்டு இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது

.கடந்த ஜனவரி 23ம் தேதி போடவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை  (27-02-2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இரண்டு இடங்கள்:

1.அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்),

2.காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்) 


அதுசமயம் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் அழைத்து சென்று பயன்பெறுமாறு GPM MEDIA சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

வளமான வாழ்விற்கான இரு துளிகள் ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் தவறாமல் மீண்டும் சொட்டு மருந்து கொடுத்திடுவோம்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்!
 
போலியோ சொட்டு மருந்து கொடுப்போம் !

போலியோ இல்லாத உலகை உருவாக்குவோம் !!

தகவல்:

திருமதி.லூர்து மேரி அவர்கள், கிராம சுகாதார செவிலியர், நாட்டாணிபுரசக்குடி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments