புதுக்கோட்டை வழியாக மின்சார என்ஜின் பொருத்தி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியதுபுதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கிய நிலையில் மின்சார என்ஜின் பொருத்தி ரெயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

சென்னையில் இருந்து காரைக்குடிக்கு மின்சார என்ஜின் பொருத்தி வரப்பட்ட பல்லவன் ரெயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி நேற்று இயக்கப்பட்டது. தொடர்ந்து மின்சார என்ஜின் பொருத்தி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். இதேபோல் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments