கோபாலப்பட்டிணத்தில் மின் மோட்டார் அறை சீரமைக்க கோரிக்கை
கோபாலப்பட்டிணத்தில் மின் மோட்டார் அறை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமம் அவுலியா நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் அருகே மின் மோட்டார் இயக்கும் அறை கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி  பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும், எந்தநேரமும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.


ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கும், மின்மோட்டாருக்கு கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தின் உள்பகுதியில் உள்ள கான்கிரீட்கள் பெயர்ந்து, கம்பிகள் தெரிவதுடன் உள்ளே செல்வதற்கே அச்சுறுத்தலாக உள்ளது. கட்டிட கதவுகளும் பழுதடைந்து விட்டதால், திறந்த நிலையிலேயே உள்ளது. மேலும் பழுதடைந்த கட்டிடம் அருகே அரசு பள்ளிக்கூடம் உள்ளதால் இடிந்து விழுந்தால் மாணவர்கள் விபத்தில் சிக்கக்கூடிய நிலையில் உள்ளது. 

ஆகவே கட்டிடத்தை உடனடியாக சீரமைத்தோ அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments