கோபாலப்பட்டிணத்தில் 2 இடங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்.




கோபாலப்பட்டிணத்தில் இரண்டு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று பிப்ரவரி 27 நடைபெறும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள 
கோபாலப்பட்டிணத்தில் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் மற்றும் கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகில் உள்ள பால்வாடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.


முகாமில்  மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. மேலும் சொட்டு மருந்து போடாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments