கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் எழுத்துக்கள் இல்லாத ஊர் பெயர் பலகை!! சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!!
கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊர் பெயர் பலகையில் அழிந்து வரும் எழுத்துகள் சரி செய்ய சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகர் நுழைவாயிலில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை தெரிந்து கொள்ள ஊர் பெயர் எழுதப்பட்ட பலகையை வைத்துள்ளனர். அதில் கிலோ மீட்டர் மற்றும் திசைகள் குறித்து கோபாலப்பட்டிணம், கட்டுமாவடி, தொண்டி என எழுதப்பட்டுள்ளது.மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாகவே ஊர் பெயர் பலகை எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ளன. இதனால் புதிதாக இங்கு வருபவர்கள், சரியான இடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊர் பெயரை அறிந்து கொள்ளவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மாற்றுவழியில் சென்று விடுகின்றனர்.
 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெயர் பலகையை சரி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments