மீமிசலை பேரூராட்சியாக தரம் உயா்த்தக் கோரிக்கை
மீமிசலை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மீமிசல் ஊராட்சியை பேருராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். மீமிசல் ஊராட்சியில் தேங்கி நிற்கும் சாக்கடையை அகற்றி வடிகால் அமைத்துத் தர வேண்டும். கொலுவானூா் ஆற்றில் தேங்கிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்தி ஆற்றின் மேம்பாலத்தை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும்.

கால்நடை மருத்துவமனைக்குப் போதிய பணியாளா்கள்,மருத்துவா்கள் நியமிக்க வேண்டும். வெளிவயல் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க கூட்டுக் குடிநீா்த்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எலிவயல், வெளிவயல் கிராம சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு எஸ். ஜெயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஆவுடையாா்கோவில் ஒன்றியச் செயலா் கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் அமிா்தம், ஆவுடையாா்கோவில் நகரக் கிளைச் செயலா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments