கோபாலப்பட்டிணம் சின்னப்பள்ளிவாசல் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை! சரி செய்த மின் ஊழியர்கள்!!கோபாலப்பட்டிணம் சின்னப்பள்ளிவாசல்  அருகே மின் கம்பி அறுந்து விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம்  சின்ன பள்ளிவாசல் அருகில் 11 பிப்ரவரி 2021 இரவு 9  மணியளவில் மின் கம்பியில் மரக்கிளை உரசியதால் மின் கம்பி அறுந்து விழுந்தது. மேலும் மின் கம்பி அறுந்து விழும் நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

மின் கம்பி அறுந்து விழுந்ததால் 2 மணி நேரத்திற்கு மேலாக கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில் மின் ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

மின்கம்பியை சரி செய்த ‌மின் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

அவ்வப்போது  கோபாலப்பட்டிணத்தில் காற்றினால் , மரம் கிளைகள் உரசுவுதால் மின்கம்பிகள் சில இடங்களில் அறுந்து விழுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று GPM மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments