அறந்தாங்கியில் நகராட்சி தேர்தலையொட்டி காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி


புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் நகராட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களித்திட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில்  காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

அறந்தாங்கியில் நடைபெற இருக்கிற நகராட்சி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பதட்டமின்றியும்....அச்சமின்றியும் வாக்களித்திட

புதுக்கோட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் 10.02.2022 ஆம் தேதி  அறந்தாங்கி காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை சாலை சந்திப்பான செக்போஸ்ட்டில் இருந்து புறப்பட்ட  கொடி அணிவகுப்பினை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜெரினாபேகம் அவர்களின் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க துவக்கி வைத்தார்கள்.

அறந்தாங்கி  காவல் துணைக் கண்காணிப்பாளர்      திரு.தினேஷ்குமார், காவல் ஆய்வாளர் திரு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பேரணியானது செக்போஸ்டில் துவங்கி பெரியகடைவீதி, பழைய ஆஸ்பஸ்திரி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, அண்ணாசிலை சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் முன்பு பேரணி நிறைவடைந்தது.

மேலும் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி, நாகுடி,ஏம்பல்,கரூர், கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

என்றும் மக்கள் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments