கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை






கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்தது.

குமரி கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இன்று, தென் தமிழக கடேலார மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 10 பிப்ரவரி வியாழக்கிழமை  இரவு  11 மணியளவில் காற்றுடன் மழை பெய்தது சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்  திடீர்  மழையால்  வெப்பம் தனிந்து குளுமையான காற்று வீசியது .தற்போது 11.30 நிலவரப்படி மின்தடை செய்யப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments