கோபாலப்பட்டிணத்தில் வீட்டின் வெளியே இருந்த பால் பாக்கெட்டை குரங்கு எடுத்து செல்லும் வீடியோ காட்சி!






கோபாலப்பட்டிணத்தில் வீட்டின் வெளியே இருந்த பால் பாக்கெட்டை குரங்கு எடுத்து செல்லும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் சில மாதங்களாக குரங்குகள் கூட்டமாகவும், தனியாகவும்  சுற்றி திரிகிறது. இதனிடையில் கோபாலப்பட்டிணம் மதினா தெரு 1-வது வீதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே இருந்த பால் பாக்கெட்டை கூட்டமாக வந்த குரங்குகள் தூக்கி சென்றது. 

பால் விற்பனையாளர் தினமும் பால் பாக்கெட்டுகளை வீட்டின் வெளியே வைத்து விட்டு செல்வது வழக்கம். அதே போன்று  நேற்று பிப்ரவரி 09 காலை பால் பாக்கெட்டுகளை வீட்டின் வெளியே வைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வந்து பார்க்கையில் இரண்டு பக்கெட்டுகளுக்கு பதிலாக ஒரு பாக்கெட் மட்டுமே இருந்துள்ளது. இதனையடுத்து பால் விற்பனையாளருக்கு தொடர்பு கொண்டு கேட்கையில் தான் இரண்டு பால் பாக்கெட்டுகளை வைத்து விட்டு சென்றதாக கூறினார். 

இந்நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை (CCTV) ஆய்வு செய்து பார்த்ததில் குரங்கு ஒன்று பால் பாக்கெட்டை எடுத்து செல்வது பதிவாகியிருந்தது.

எனவே வீட்டில் உள்ளவர்கள் உணவு பொருட்கள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை வெளியில் வைக்கும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.மேலும் வெளியில் செல்லக்கூடியவர்கள் எச்சரிக்கையாக செல்லும்படியும், பிள்ளைகளை தேவையின்றி வெளியில் அனுப்பாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம். 

கடந்த வருடம் 2021ல் கோபாலப்பட்டிணத்தில் 4 பேரை வெறி நாய் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. தற்போது விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியமாக உள்ளது. 

குரங்குகளை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் கோபாலப்பட்டிணத்தில் சுற்றி திரியும் குரங்குகள் குறித்து GPM மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments