ஹிஜாப் விவகாரம் : புதுக்கோட்டை & கோட்டைப்பட்டினத்தில் TNTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்


ஹிஜாப் விவகாரம் :  புதுக்கோட்டை & கோட்டைப்பட்டினத்தில் TNTJ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின்  மதஉரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக  9.2.2022   புதுக்கோட்டை அண்ணாசிலை அருகிலும் காலை 10:30 மணிக்கும் கோட்டைபட்டிணத்தில் செக் போஸ்ட் அருகிலும் மாலை 4:30 அளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்கள் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் முகம்மது பாரூக் மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் மற்றும் மாவட்ட துனை செயலாளர்கள் சேக்அப்துல்லா, அப்துல் முஹ்சின்,ரபீக் ராஜா,பீர் முகம்மது, மருத்துவஅணி செயலாளர் முகம்மது அலி, மாணவரணி முஹம்மது சபீர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் 

மாநில பேச்சாளர் பா. அப்துர் ரகுமான் கலந்து கொண்டு பேசுகையில் 

இந்தியாவின் அரசியல் அமைப்பு வழங்குகின்ற சட்டம் 25. உரிமைகளை மறுக்கின்ற கொடூரச் செயல் தேசதுரோகம் என்று கூறினார்  மேலும் திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்காக நடக்கும் நாடகம், தடுக்கப்பட்டுள்ள அப்பெண்கள் எல்லோரையும் போல சீருடை அணிந்து கூடுதலாக ஹிஜாப் எனும் தலைமுடியை மறைத்து முகத்தை மறைக்காத ஆடையை அணிவதால் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினார், இவ்வாறான பிரத்தியேக ஆடைகளை கூடுதலாக அணிவது ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறது, சீக்கிய குழந்தைகள் தலைப்பாகை அணிவதும், ராணுவத்தில் ஜென்ரல் நிலை வரை அதை தொடர்வதும் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஏன் இந்த பாகுபாடு ? என்ற கேள்வியை எழுப்பினார். 

மேலும் கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு , அடுத்தாண்டு வரும் தேர்தலை மனதில் வைத்து  ஓட்டுக்களை பிரிப்பதற்காக அரசியலமைப்புச்சட்டம் வழங்கி இருக்கும் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது என்றும், இந்திய அளவில் பேசப்படும் இந்தப்பிரச்சினை குறித்து சமூகநீதிக்கான கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும் என இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்ப்பதாகவும் பேசினார். 

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் தங்கள் கைகளில் இந்தியா எங்கள் தேசமடா ஹிஜாப் எங்கள் உரிமையடா என்ற பதாகை வாசகங்களுடன் கலந்து கொண்டனர். 

இறுதியாக மாவட்ட துணைதலைவர் முகம்மது மீரான் நன்றி கூறினார்...

இந்த இரண்டு ஆர்ப்பாட்டக்களத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்...

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆயிரக்கணக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பாஜகவிற்கும் கர்நாடக அரசுக்கும் அதற்கு ஆதரவாக நிற்கும் மக்கள் விரோத சக்திகளுக்கும் எதிராக பதகைகளை தாங்கி, கோஷங்களை எழுப்பினர்.

இப்படிக்கு
மாவட்ட நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments