கோட்டைப்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பரிசு வழங்கும் விழா


கோட்டைப்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பரிசு  வழங்கும் விழா  நடைபெற்றது

கோட்டைப்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2016-17ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கும் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ,  துணை தலைவர், ஆனா அறக்கட்டளை மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்தர், ஷேர்கான் ஆகியோர்களின் சார்பாகவும் மாணவிகளுக்கு ( மொத்தம் ரூபாய் 60,000  மதிப்புள்ள )  18/02/2022 வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கி  கௌரவிக்கப்பட்டது பின்னர் நமது பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த  சகோதரர் பாலு அவர்கள் பணி ஓய்வு பெற்றமைக்கு பாராட்டு விழாவும் நமது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சிராஜ்நிஷா அவர்கள் பணி மாறுதலாகி செல்கின்ற காரணத்தினால் அவர்களுக்கும் பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது

 இந்நிகழ்வில் கடந்த நான்கு வருடங்கள் பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு இந்நிகழ்விற்கு வந்திருந்தவர்களை மகிழ்ச்சியால் திக்குமுக்காட செய்திருந்தனர் மேலும் நம் பள்ளியானது கடந்த 7 வருடமாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் இதற்காக இறைவனிடத்திலே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

  மாணவிகளை சிறப்பாக வழிநடத்தி நல்லொழுக்கத்தையும் கல்வியையும் போதித்து வரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியான  தலைமை ஆசிரியர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து அவர்களுக்காகவும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோமாக

நிகழ்வில் ஊ ஒ தொடக்கப்பள்ளி (பெண்கள்) தலைமை ஆசிரியர் திருஅருளானந்த், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஆண்கள்) திருமதி ராணி, ஆனா அறக்கட்டளையின் தலைவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமால் முகைதீன், ஒன்றிய கவுன்சிலர் ஷேர்கான், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனா அக்பர் அலி,
மீனவர் சங்க தலைவர் ஹசன் முகைதீன், வர்த்தக சங்க பொருளாளர் கே எம் கலீல் ரகுமான், ஊ ஒ தொடக்கப்பள்ளி (ஆண்கள்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஜ்மீர்கான், ஊ ஒ தொடக்கப்பள்ளி (பெண்கள்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  சுலைமான், அரசு உயர்நிலைப்பள்ளி (பெண்கள்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜஹாங்கீர் அலி,
பெ ஆ கழக துணைத்தலைவர் முகமது லாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியின் ஆசிரியர் திருமதி சிவகாமி அவர்கள்  விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

தகவலுக்காக
பா.முகம்மது லாபிர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments