சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சிலம்பு எக்ஸ்பிரஸ்
2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் வாரம் ஒரு முறை சென்னை - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டது. அந்த ரெயில் மானாமதுரை வரை நீட்டிக் பெயரில் அதன் முதல் சேவையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிலம்பு எக்ஸ்பிரசை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. 4 ஆண்டுகள் தொடர் கோரிக்கையை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது
பின்னர் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட மக்க ளின் தொடர் கோரிக்கை யாக சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், 2 ஆண்டு கள் கழித்து பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் வாரம் 3 முறை இயங்க ஆரம்பித்தது. தற்போது சென்னை எழும்பூரில் இருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் புறப்படுகிறது.
தினசரி இயக்க வேண்டும்
ஆனால் சிலம்பு எக்ஸ்பி ரஸ்தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளை கடந்தும் தினசரி இயக்குவது கேள்விக்குறியாக அடுத்து சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்ளது. எனவே அதை தின சரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தென்காசி, விருதுந கர் மாவட்ட மக்களுக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்னை' செல்வதற்கு வாரம் 3 முறை மட்டும் சேவை இருப்பதால் மற்ற நாட்களில் சென்னை செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இடப்பற்றாக்குறை என காரணம் காட்டி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்குவதில் காலம் தாழ்த்தி வருகின்ற னர்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்குவதற்கு செங்கேர்ட்டைரெயில் நிலையத்தில் போதுமான இடவசதி உள்ளது. எனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் போதுமான வசதிகளை மேம்படுத்தி, தற்போது 7 பெட்டிகளாக இயங் கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை 24 'பெட்டிகளாக அதிகப்படுத்தி உடனடியாக தினசரி சேவையாக இயக்க வேண்டும்" என்றனர்.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை வழித்தடம்
தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
விருத்தாசலம்
அரியலூர்
திருச்சி
புதுக்கோட்டை
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சிவகாசி
இராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
சங்கரன்கோவில
கடையநல்லூர்
தென்காசி
செங்கோட்டை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.