வி.கே.புரத்தில் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டவருக்கு கொலை முயற்சி தலையாரி உட்பட 7 பேர் கைது


வி.கே.புரத்தில் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டவரை கொலை செய்ய முயன்ற தலையாரி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பையை அடுத்த வி.கே.புரம் அனவன்குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ் (38). இவரும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பால்ராஜை தாக்கியும், பின்னால் அமர்ந்து வந்த ராமகிருஷ்ணன் மீது மிளகாய் பொடியை தூவி செல்போனை பறித்துக்கொண்டு பால்ராஜை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பால்ராஜ் வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்த போலீசார் முக்கூடலை சேர்ந்த இமானுவேல் ஞான பிரவீன்(19) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அடைச்சாணியை சேர்ந்த தலையாரி முத்துக்குமார் (32) என்பவரை பற்றி பால்ராஜ் அடிக்கடி ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் முத்துக்குமார் தனக்கு தெரிந்தவர்களை வைத்து பால்ராஜை அடித்து கொலை மிரட்டல் விடுத்தது  தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட முத்துக்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments