நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்


நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்.ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்கள்

இராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி பரிந்துரையில் பவர் குழும தலைவர் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் ஏற்பாட்டில் பவர் குரூப் பவுண்டேசன் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டது.

அதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மதுரை கோட்ட உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார்,
நிலைய கண்காணிப்பாளர் ஐயப்பன்,, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, இராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி,  தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாஹ் கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது. மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களின் நெடுநாள் கோரிக்கையான தயாரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு நவாஸ்கனி எம்பி அவர்களால் பொதுமக்களுக்கு குடிநீர் உபயோகத்திற்கு வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments