கோபாலப்பட்டிணத்தில் வெளுத்து வாங்கும் மழை





மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல (1.5 கிலோமீட்டர் உயரத்தில் ) சுழற்சி காரணமாக இன்று, (12.02.2022) தென் தமிழக மாவட்டங்கள்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 12 பிப்ரவரி காலை 09 மணியளவில்  இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது , சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்  திடீர்  மழையால்  வெப்பம் தனிந்து குளுமையான காற்று வீசியது  . அதே போல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.  சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
































எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...









Post a Comment

0 Comments