அதிராம்பட்டினம் நகராட்சி முதல் தேர்தல்-அடிப்படை தேவைகள் பூர்த்தியாகுமா ?





அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகுமா? என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்து வந்தது. இந்நிலையில் அது நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தற்போது 27 வார்டுகள் கொண்ட நகராட்சியாக மாறியது.

இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறுதல் மற்றும் பரிசீலனை என முடிவுற்ற நிலையில் தற்போது முதல் நகராட்சி தேர்தலை அதிராம்பட்டினம் நகராட்சி சந்திக்கிறது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 14 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடித்தொழில், உப்பளத் தொழில் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டதால் தங்களது அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் அதிராம்பட்டினம் நகராட்சியின் முதல் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மேலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments