சென்னை எழும்பூர் - தூத்துக்குடி விரைவு ரயிலை திருவாரூர் காரைக்குடி ‌, அகல ரயில் பாதை வழியாக இயக்க கோரிக்கை

திருவாரூர் மாவட்ட உபயோ கிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகரா ஜன்.மாவட்ட செயலாளர் டாக்டர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சர், திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை ரூ.1,500 கோடி செலவில் முடிக்கப் பட்டு 2 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாமல் இருந்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கங்கள் வியாபார நோக்கிலும் வழித்தடத்தை விரும்புகிறார்கள். சென்னை- தூத்துக்குடி ரயில் மார்க்கம் திருச்சி, மதுரை வழியே 670 கி.மீ. சுற்றி செல்கிறது. ஆனால் சென்னை-காரைக்குடி வழியே இயக்கப்பட்டால் 130 கி.மீ. எரிபொருளும் பயண நேரமும் மற்றும் பயணச் செலவும் குறையும். இவ்வழியில் போக் குவரத்து நெருக்கடியும் மிகவும் குறைவாக உள்ளது. ஆதலால் ரயில் கிராசிங் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரிகளிடம் இருந்தும் பொதுமக்களிடம்
இருந்தும் மாவட்ட ரயில் உப யோகிப்பாளர்கள் சங்கத்திற்கு இத்தடம் வழியில் விரைவு வண்டி இயக்க கோரிக்கை வந்துள்ளது. 

தென் மண்டல ரயில்வே நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு சென்னை தூத்துக்குடி விரைவு ரயிலை திருத்துறைப்பூண்டி காரைக்குடி அகல ரயில் பாதை வழியே இயக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments