கந்தர்வகோட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூ.1¾ லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..
கந்தர்வகோட்டை அருகே புனல் குளம் கிராமத்தை சேர்ந்தவர் துரையரசன் (வயது 56). இவர் மருங்கூரணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கந்தர்வகோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வெளிேய தனது மோட்டார் சைக்கிள் அருகில் வந்தார்.
அப்போது மர்ம நபர்கள் இவரது கவனத்தை திசை திருப்பும் வகையில், கீழே 100 ரூபாய் கிடப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து துரையரசன் தனது கையில் இருந்த பணப்பையை மோட்டார் சைக்கிளில் இருந்த கவரில் வைத்துவிட்டு 100 ரூபாய் எடுப்பதற்கு முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிள் வைத்திருந்த பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றனர். 

போலீசார் வலைவீச்சு 
இதனை சிறிதும் எதிர்பாராத துரையரசன் 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தனது பணப்பையை தொலைத்ததை எண்ணி வருந்தி நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியரிடம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments