கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி!! சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!




கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி!! சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகே பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து தொட்டியின் பில்லர் கால்கள் அனைத்தும் அரிக்கப்பட்டு கீழே விழும் அவல நிலையில் உள்ளது.

இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புகளும் உள்ளது.தொடர்ந்து பெய்த மழையால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பலவீனமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் அதிக அளவில் நடமாடுகின்றனர்.










இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவசர அவசியம் கருதி இந்த பலவீனமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உயிர்பலி வாங்கும் முன்  சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments