மார்ச் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: ஞாயிறு அன்று ஆசிரியர்கள் வரவேண்டும்: பள்ளிக்கல்வி துறை
மார்ச் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் ஆனால் மார்ச் 20-ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
ஆனால் வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மார்ச் 20ஆம் தேதி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments