மணமேல்குடி அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.2.80 லட்சம் மோசடி மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.2.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி சிவரஞ்சனி (வயது28)

இந்நிலையில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கலாம் என சிவரஞ்சனி கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை பார்த்த அவர், அந்த மர்ம நபர்கள் அனுப்பிய தகவலின்படி முதலில் பரிசோதனைக்காக ரூ.500 செலுத்தியுள்ளார். கொஞ்ச நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.700 வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய அவர் தொடர்ந்து வருகின்ற குறுந் தகவல்களுக்கு பதிலளித்து அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் செலுத்திய நிலையில் தனது வங்கி கணக்கிற்கு வருமானம் வராததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவுசெய்து  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றார்.

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்த்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments