கோவா நேரடியாக செல்ல திருச்சி வழியாக செல்லும் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்
வரும் 09/03/22 முதல் வண்டி எண்-17316/வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா(கோவா) வழி திருச்சி வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்.


திருச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும்  புதன் கிழமை அதிகாலை 03:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் வியாழன் அதிகாலை 03:25 மணிக்கு கோவா செல்லும்.(பயண நேரம்-24 மணிநேரம் 15நிமிடங்கள் மட்டுமே) மறுமார்கத்தில் ஒவ்வொரு வாரமும் வண்டி எண்-17315/வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி வழி திருச்சி வாராந்திர ரயில், திங்கள் கிழமை வாஸ்கோடகாமா(கோவா) லிருந்து காலை 09:00 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு செவ்வாய் கிழமை காலை 08:00 மணிக்கு வரும். 


குறிப்பு: புதுக்கோட்டையிலிருந்து தினசரி இரவு 12:05 மணிக்கு புறப்பட்டு, திருச்சி இரவு 01:15 மணிக்கு  செல்லும் 22662/ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் சேது ரயில், திருச்சியிலிருந்து புதன் இரவு 03:10 மணிக்கு புறப்படும் 17316/கோவா ரயிலுக்கு திருச்சியில் இணைப்பு கொடுக்கும். இந்த இரண்டு ரயில்களுக்கு சேர்த்து புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஒரே படிவத்தில் தொடர்பயணமாக(Onward Journey) ஆக முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இது மட்டுமல்லாது இதே இணைப்பை பயன்படுத்தி புதுக்கோட்டையிலிருந்து ஈரோடு, சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பனஸ்வாடி, ஹூப்ளி, மாடகோன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments