இன்று வணிகம் நாளை வீடா?? அதிர்சிசியில் மக்கள் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.105 உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.105 உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வணிக சிலிண்டர்களின் விலை 170 ரூபாய் அதிகரித்துள்ளது.

19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் இன்று முதல் சென்னையில் ரூ.2040க்கு பதிலாக ரூ.2145.5க்கு கிடைக்கும். டெல்லியில் ரூ.1907க்கு பதிலாக ரூ.2012க்கும், கொல்கத்தாவில் ரூ.1987க்கு பதிலாக ரூ.2095க்கும் கிடைக்கும்.

மும்பையில் ரூ.1857ல் இருந்து ரூ.1963ஆக விலை அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மார்ச் 7 க்குப் பிறகு, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையும் உயர்த்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments