புதுக்கோட்டை அரண்மனைக்கு மன்னர் அடித்தளமிட்ட கரணை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைப்பு
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு அரிய பொருள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிக்காக வைக்கப்படும். அந்த வகையில் இந்த மாதத்தில் (மார்ச்) பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு கரணை அல்லது கொல்லறு என அழைக்கப்படும் பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருள் வெள்ளி உலோகத்தாலானது. கைப்பிடி தந்தத்தாலானது. புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் இக்கரணையை கொண்டு 24-2-1913 அன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள புதிய அரண்மனைக்கு அடித்தளமிட்டார். இந்த பொருளை மன்னர், புதுக்கோட்டை அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக அளித்தார். இந்த அரிய பொருளை பொதுமக்கள் அனைவரும் வருகிற 31-ந் தேதி வரை பார்வையிடலாம். வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் 2-வது சனிக்கிழமையை தவிர நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments