இனி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இதுதான்; தமிழக அரசு அதிரடி உத்தரவு




ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதில் நடைபெறும் மோசடியை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரேஷனில் வாங்காத பொருட்களுக்கு வாங்குவதாக குறுஞ்செய்தி வருவதாக பல்வேறு புகார்கள் மக்கள் தரப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை.

இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு தீர்வாக கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன்‌ தவறாது இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. . இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை, ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும். இதரப் பகுதிகளில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 6 மணி வரை, நியாய விலைக் கடைகள் இயங்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டே வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments