புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு கருணை பணி நியமனஆணை வழங்கல்
ஊராட்சி ஒன்றிய உதவியாளா்களாகப் பணியாற்றிய இருவா் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த கா. வலிமுகமது பணியின்போது உயிரிழந்ததால், அவரது வாரிசு இம்ரான் நசீருக்கு ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அ. திலகேஸ்வரன் பணியின்போது உயிரிழந்ததால் அவரது வாரிசு தி. சத்தியமூா்த்திக்கு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகதத்தில் உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) தமிழ்ச்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments