புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 50 போ் காயம்


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 50 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 581 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 263 மாடுபடி வீரா்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில், 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அதில், பலத்த காயமடைந்த 11 போ் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பாா்வையிட்டனா். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments