புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் கதிரியக்க கருவி மற்றும் கணினிமய கதிரியக்க முறை: அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள்





புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் கதிரியக்க கருவி ((DIGITAL RADIOGRAPHY WITH FLUROSCOPY) மற்றும் கணினிமய கதிரியக்க முறை (COMPUTARISED RADIOGRAPHY SYSTEM) ) என்ற கருவிகளை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கதிரியக்கத் துறையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் கதிரியக்க கருவி ((DIGITAL RADIOGRAPHY WITH FLUROSCOPY மற்றும் ரூ.9.52 லட்சம் மதிப்பீட்டில் கணினிமய கதிரியக்க முறை (COMPUTARISED RADIOGRAPHY SYSTEM)  என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (03.03.2022) துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திரு.எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவத்துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவம், முத்தமிழறிஞர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் கதிரியக்க கருவி (DIGITAL RADIOGRAPHY WITH FLUROSCOPY)மற்றும் ரூ.9.52 லட்சம் மதிப்பீட்டில் கணினிமய கதிரியக்க முறை (COMPUTARISED RADIOGRAPHY SYSTEM) என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை வழங்கியுள்ளார்கள்.

இக்கருவிகள் மூலம் குறைந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு எக்ஸ்-ரே நிழற்படங்கள் கணினி தொழில் நுட்ப உதவியுடன் விரைவாகவும், தெளிவாகவும் எடுத்து நோயின் தன்மையை விரைவாக கண்டறிய இயலும். மேலும், குறைந்த கதிரியக்கம் அளவில் தெளிவான எக்ஸ்-ரே நிழற்படங்கள் எடுக்க முடியும். மேலும், அதி நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நிழற்படங்கள் எடுக்க முடியும் என்பதால் நோயின் தன்மையை எளிதாகவும், தெளிவாகவும் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை வழங்க இயலும்.

மேலும் இந்த எக்ஸ்-ரே நிழற்படங்களை நீண்ட காலத்திற்கு உபகரணத்தில் சேமித்து (ளுவழசயபந ஊயியஉவைல) வைப்பதுடன், நோயாளிக்கு தேவையான நேரத்தில் நிழற்படங்களை பார்த்து சிகிச்சை அளிக்க முடியும். இக்கருவிகளில் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த படுவதால் தொழில் நுட்ப உதவியாளர்கள் எளிதாக பயன்படுத்தலாம். இந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் முதல் முறையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைவது சிறப்பாகும்.

எனவே இக்கருவிகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொண்டு நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டுமென மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் தெரிவித்தார்கள்.

பின்னர் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர், அரசு மருத்துவக்கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments