கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கக் கோரிக்கை!!
கோபாலப்பட்டிணம் பகுதி ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 1700-க்கும் மேற்பட்ட ரேஷன் காா்டுகள் புழக்கத்தில் உள்ளன.

 தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒரு சில ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கோபாலப்பட்டிணத்தில் வேட்டி, சேலை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கேட்ட போது முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

எனவே இலவச வேட்டி, சேலை வழங்கும் தேதியினை ரேஷன் கடை அறிவிப்புப் பலகையில் தெரிவிக்க வேண்டும். காலதாமதமின்றி அனைவருக்கும் வேட்டி, சேலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments