கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தண்டனை அளிப்பதா? தனியார் பள்ளிகளுக்கு, அரசு எச்சரிக்கை





தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை ஓய்ந்த பின்னர், அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை. அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தப்படுவதாக பல்வேறு இடங்களில் இருந்து புகார் வந்துள்ளது.

இது போன்ற செயல்களில் எந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஈடுபடக் கூடாது. கட்டணம் செலுத்த வில்லை என்பதற்காக எந்த மாணவரையும் வெளியே அனுப்பவுவதும், வெளியே அமர வைப்பதும் சரியான நடவடிக்கை இல்லை. 

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. இது போன்ற பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர் கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments