கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடன் மழை!




தமிழகம் முழுவதும் கடந்த 2021 அக்டோபர் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்தது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து கடும் குளிர் நிலவியது

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது






அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில்  04 மார்ச் காலை மதியம் 2 மணியளவில்  15 நிமிடம் தூரல் மழை பெய்தது சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில்  திடீர்  மழையால் வானம் மேகமூட்டத்துடன் வெப்பம் தனிந்து குளுமையான காற்று வீசியது  .  கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments