உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு !!
மீட்புப் பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.


உக்ரைன் மீது இன்று 10வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டு உள்ளூர் நேரப்படி, காலை 6 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வகையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் தரப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப் பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்தள்ளது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments