பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்க தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் மார்ச்.10 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் துவக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகிறது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மண்டலத்திற்கு ஒரு இடம் வீதம் தமிழ்நாட்டில் 5 இடங்களில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் மார்ச் 10-ஆம் தேதி கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.


மார்ச் 10-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணி துவங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் TELC மைதானத்தில் பேரணி நிறைவுபெறும், அதைத் தொடர்ந்து TELC மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments