மாா்ச் 8-இல்நூலகத்தில் பெண்களுக்கு இலவச உறுப்பினா் பதிவு
உலக மகளிா் தினத்தையொட்டி வரும் மாா்ச் 8 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பெண்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உறுப்பினா் பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் கி. சசிகலா கூறியது:

மாவட்ட மைய நூலகத்தில் வரும் மாா்ச் 8ஆம் தேதி மகளிா் தினத்தையொட்டி அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக உறுப்பினராகலாம். அந்தக் கட்டணத் தொகையை வாசகா் வட்டம் ஏற்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் பேச்சுப் போட்டியில் என் வாழ்வில் நூலகம் என்ற தலைப்பில் பெண்கள் பங்கேற்கலாம்.

இதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நூலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04322 223484 எண்ணிலோ பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 2021 ஜனவரி முதல் டிசம்பா் வரை அதிக முறை நூல்களை எடுத்துச் சென்று ஒப்படைத்தவா்கள் 3 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. எனவே, மகளிா் தின விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் பலரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments